Translate

இந்திய மத்திய பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள்


  • விலை குறையும் பொருட்கள்: எல்சிடி, எல்இடி, சைக்கிள், சினிமா டிக்கெட், கேன்சர் மற்றும் எச்ஐவி மருந்துகள் விலை
  • விலை உயரும் பொருட்கள்: ஏஸி, பிரிட்ஜ், மொபைல் போன் கட்டணம், சிகரெட் விலை
  • தங்கம், பிளாட்டினம் மீதான சுங்க வரி 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்வு
  • வைரம் மீதான வரிகள் உயர்வு
  • விமானங்கள், ரயில்களுக்கான கருவிகள் இறக்குமதி மீதான சுங்க வரி ரத்து
  • சுத்திகரிக்கப்பட்ட தங்கம் மீதான சுங்க வரி 2 மடங்காக உயர்வு
  • மொபைல் போன் பாகங்கள் மீதான அடிப்படை சுங்க வரி ரத்து
  • பட்ஜெட் சொல்வது என்ன?: ஆடம்பர பொருள்கள், ஓட்டல் உணவுகள், விமானப் பயணங்கள், கார்கள் விலை கிடுகிடு உயர்வு!
  • பிராண்டட் ஆடைகள் மீதான கலால் வரி (excise duty) 12 சதவீதம் உயர்வு
  • எல்ஈடி, எல்சிடி மீதான சுங்க வரி ரத்து
  • பங்குகளை வாங்கி விற்க 20 சதவீத வரிவிலக்கு
  • சேவை வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்வு
  • சிகரெட் மீதான கலால் வரி உயர்வு
  • அனல் மின் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளிக்கு சுங்க வரி ரத்து
  • உரத் தொழிற்சாலைகளுக்கான கருவிகளுக்கு 5 சதவீத சுங்க வரி ரத்து
  • 2012-13ம் ஆண்டில் அரசின் செலவுகள் 29% உயரலாம்
  • சமையல் எரிவாயு மீதான சுங்க வரி (customs duty) நீக்கம்
  • நிலக்கரி இறக்குமதி மீதான சுங்க வரி முழுமையாக நீக்கம்
  • 2012-13ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் (GDP) 5.1 சதவீதக்குள் அடக்க இலக்கு
  • பெரிய கார்கள் மீதான வரி 27% உயர்வு
  • 2013 நிதியாண்டில் சந்தையில் ரூ. 4.8 லட்சம் கோடி கடன் திரட்ட திட்டம்
  • பள்ளிக் கல்விக்கு சேவை வரியிலிருந்து விலக்கு
  • அடிப்படை கலால் வரி (excise duty) 12% உயர்வு
  • சேவை வரி (service tax) உயர்வு மூலம் ரூ. 18,660 கோடி அதிக வருவாய் கிடைக்கும்
  • 7 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்களாக தரம் உயர்வு
  • விவசாயிகள் கடன் அட்டைகளை அனைத்து ஏடிஎம்களிலும் பயன்படுத்தலாம்
  • பான் கார்டு மூலம் வருமான வரி செலுத்தாதோரை கண்டறிய திட்டம்
  • பட்ஜெட் சொல்வது என்ன?: வருமான வரி கட்டுவோருக்கு பெரிய சலுகைகள் ஏதும் இல்லை.. கொஞ்சமே கொஞ்சம் சலுகை
  • வருமான வரி விலக்கு ரூ. 2 லட்சமாக உயர்வு (ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை வரி இல்லை)
  • ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியத்துக்கு 10% வருமான வரி
  • ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20%
  • ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானத்துக்கு 30% வருமான வரி
  • 2012ம் ஆண்டில் திட்டமில்லா செலவுகள் ரூ. 9.7 லட்சம் கோடி
  • கறுப்புப் பணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். சிறப்பு பிரிவும் தொடங்கப்படும்
  • பிரணாபின் 'தனியார், அந்நிய மய பட்ஜெட்' - தூங்கி வழியும் பங்கு மார்க்கெட் - ரிலையன்ஸ், டாடா பங்குகள் சரிவு
  • 2012ம் ஆண்டில் வரிகள் மூலமான வருவாய் ரூ. 10.77 லட்சம் கோடி
  • வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.8 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு
  • 2012ம் நிதியாண்டில் நாட்டின்நிதிப் பற்றாக்குறை 5.9% சதவீதம்
  • மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட உற்பத்தித் திறன் உயர்வு
  • நாட்டில் போலியோ முற்றாக ஒழிக்கப்பட்டது
  • 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 6000 புதிய பள்ளிகள்
  • பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1.95 லட்சம் கோடியாக உயர்வு
  • பட்ஜெட் சொல்வது என்ன: இனி மானியங்கள் பெருமளவு 'கட்'. ரேஷன், விவசாயத்தில் மட்டும் குறைந்த அளவு தொடரும்!
  • அடிப்படைக் கல்விக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 25,555 கோடி
  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களுக்கு வட்டி குறைப்பு
  • ராஜிவ் காந்தி பெயரிலான முதலீட்டுத் திட்டத்தில் ரூ. 50,000 வரை வரி விலக்கு
  • பங்குகள் மூலமான புதிய சேமிப்புத் திட்டம் அறிமுகம்
  • பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்த ரூ 12040 கோடி
  • குடிமைப் பொருள் வழங்கல் முழுக்க முழுக்க கணிணிமயமாக்கப்படும்
  • இனி கிஸான் கிரடிட் கார்டுகளை அனைத்து ஏடிஎம்களிலும் உபயோகிக்கலாம்
  • ஊரக குடிநீர், கழிவு நீர் வெளியேற்ற திட்டங்களுக்கு ரூ. 14,000 கோடி ஒதுக்கீடு
  • நாடு முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ரூ 11937 கோடி
  • கிராமப்புற வேலை வாய்ப்புக்கு ரூ 24000 கோடி
  • அரசின் சொத்துக்களை விற்று ரூ. 30,000 கோடி திரட்ட திட்டம்
  • அடிப்படைக் கட்டமைப்புத் துறைக்கு நிதி திரட்ட ரூ. 60,000 கோடிக்கு வரியில்லா பத்திரங்கள்
  • தேசிய அடையாள அட்டைத் திட்டத்துக்கு இந்த ஆண்டு மேலும் ரூ. 14,232 கோடி ஒதுக்கீடு
  • பட்ஜெட் சொல்வது என்ன?: விவசாயிகளின் ஓட்டுக்கு மீண்டும் குறி.. கடன், மானியத்துக்கு 1 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு
  • விவசாயத்துறைக்கு உதவும் நபார்ட் வங்கிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு
  • விவசாய கடன்களுக்கான வட்டி இந்த ஆண்டும் தளர்வு
  • இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க ரூ. 5.75 லட்சம் கோடி ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டைவிட 1 லட்சம் கோடி அதிகம்
  • நீர்ப்பாசனத்துக்கு என தன நிறுவனம். நீர்ப் பாசன திட்டங்களுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு
  • உள்கட்டமைப்பு, சில்லறை வர்த்தகம், தொழில்துறை, வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டவற்றில் அந்நிய முதலீடுகளுக்கு தாராளம்
  • அனைத்துத் துறைகளிலும் தாராள தனியார் மயம்
  • நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் மின் உற்பத்தி பாதிப்பு
  • மின்துறை, வீடுகள்-சாலை கட்டுமான நிறுவனங்கள் வெளிநாட்டு கடன்கள் வாங்க அனுமதி
  • 2013ம் ஆண்டில் 8,800 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்
  • 2013ம் ஆண்டில் விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 18% அதிகரிக்கப்பட்டு ரூ. 20,208 கோடி ஒதுக்கீடு
  • 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு 50 லட்சம் கோடி இலக்கு - தனியாரைச் சேர்க்கவும் முடிவு
  • மின் உற்பத்தித் துறைக்கு நிதி திரட்ட ரூ. 10,000 கோடி வரியில்லா பத்திரங்கள் வெளியிடப்படும்
  • 5 ஆண்டுகளில் யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டம்
  • விமானப் போக்குவரத்துத் துறையில் 49 சதவீதம் அந்நிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி
  • இந்திய அரசின் கடன் பத்திரங்களில் அன்னிய முதலீடுகளுக்கு தாராள அனுமதி
  • பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 15,890 கோடி நிதியுதவி
  • பட்ஜெட் எபெக்ட்: வாகனங்கள் மீது வரி உயரலாம் என்ற யூகத்தால் கார், பைக் நிறுவன பங்குகள் விலை சரிவு
  • 'பட்ஜெட் எபெக்ட்'- பங்குச் சந்தைகள் துள்ளல்- சென்செக்ஸ் குறியீட்டு எண் 180 புள்ளிகள் உயர்வு
  • சில்லறை வணிகத்தில் முதலீடுகளுக்கு வரிச் சலுகைகள்
  • மானியங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரம்
  • சில்லறை வணிகத்தில் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டம்
  • ராஜிவ் காந்தி பெயரில் புதிய முதலீட்டுத் திட்டம்
  • மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் சில்லறை வணிகத் துறையில் மேலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டுக்கு முயற்சி
  • கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள்
  • தனியார் முதலீடுகளை வேகமாக அதிகரிக்க நடவடிக்கை
  • இந்த ஆண்டில் பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் ரூ. 30,000 கோடி திரட்ட திட்டம்
  • மண்ணெண்ணெய்க்கு நேரடியாக மானியம் தர திட்டம்
  • 3 ஆண்டுகளில் மானியங்களின் அளவை நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.7%க்குள் குறைக்க திட்டம்
  • மானியங்களின் அளவு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் (GDP) 2%க்குள் கட்டுப்படுத்தப்படும்
  • உணவுப் பொருட்களுக்கு அதிக மானியம்
  • சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கும் மானியத்தை நேரடியாக வழங்க திட்டம்
  • அந்நியச் செலாவணி 29 சதவீதம் அதிகரிப்பு
  • விவசாயிகள், குடிமக்களுக்கான மானியங்கள் நேரடியாக வழங்கப்படும். சோதனை முறையில் 50 மாவட்டங்களில் இப்படி வழங்கப்படும்.
  • பொதுப் பணவீக்கம் இன்னும் இரட்டை இலக்கத்தில்
  • பெட்ரோலிய எண்ணெய் விலைகளின் கடும் உயர்வால். கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் சராசரி விலை 1 பேரல் $115
  • மானியங்களால் தான் நிதிப் பற்றாக்குறை மிகவும் அதிகரிப்பு
  • நடப்புக் கணக்கு பற்றாக்குறை 3.6%. இந்த ஆண்டு அதைக் குறைக்க நடவடிக்கை
  • ஐரோப்பிய பொருளாதார நிலைமை படுமோசம்
  • தனியார் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை
  • உற்பத்தித் துறை மீட்சியடைந்து வருகிறது
  • கடந்த 2 ஆண்டுகளாகவே வளர்ச்சி கடுமையாக பாதிப்பு
  • மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதார நிலைமை பரவாயில்லை
  • பணவீக்கத்தை கட்டுப்படுத்த சந்தையில் நிதியை கட்டுப்படுத்தியதால் வளர்ச்சி பாதிப்பு
  • சர்வதேச பொருளாதார சீர்குலைவு இந்தியாவையும் பாதிக்கிறது
  • 2012ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது
  • பணவீக்க விகிதம் அடுத்த சில மாதங்களில் குறையும்
  • அடுத்த ஆண்டில் இந்திய வளர்ச்சி 7.6% ஆக உயரும்
  • கருப்புப் பணம், ஊழலை ஒழிக்க நடவடிக்கை
  • ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 200 மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும்