Translate

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்


 கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் என இருவகையாக இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன.

முதலாவது ஒலிம்பிக் போட்டி என வரலாற்றில் காணப்பட்டது கி.மு 776 கிரேக்க நாட்டில் ஒலிம்பியா எனும் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிதான். இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஸீஸஸ் (Zeus) எனும் கிரேக்கரின் முக்கிய கடவுளுக்காக எடுக்கப்பட்ட விழாக்காலங்களில் நடத்தப்பட்டனவாம். பின்பு உரோம பேரரசரால் ஒலிம்பிக் போட்டிகள் தடை செய்யப்பட்டது.


1500 வருடத்திற்கு பின் மீண்டும் 1896ல் தொடங்கப்பட்டதாம். பிரெஞ்சு நாட்டுக்காரரான பைரே டீ கோப்பேர்டின் (Pierre deCoubertin) என்பவரால்தான் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் உயிர்பெற்றனவாம். பின் அவரே அகில உலக ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். புராதன ஒலிம்பிக் போட்டி போலவே இவையும் அதே பெயரைக் கொண்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஏதென்ஸ் நாட்டில் தொடங்கப்பட்ட இப்போட்டியில் 13 நாடுகளிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டார்கள், அனைவரும் ஆண்களே. இதில் மொத்தம் 43 வகையான போட்டிகள் இருந்தன.

கி.மு 490 ஆம் ஆண்டு மராத்தன் என்ற இடத்திலிருந்து ஏதென்ஸ் நகருக்கு 25மைல் தொலைவை ஓடிச் சென்று உரோமானியர்கள் பெர்ஸீயன்களை போரில் வென்ற வெற்றிச் செய்தியை சேர்ப்பித்த கிரேக்க போர்வீரனின் நினைவாக வந்ததுதான் இந்த மராத்தன். முதலாவது ஒலிம்பிக் போட்டியில் மராத்தன் ஓட்டப் பந்தயத்தில் கிரேக்க வீரரே வெற்றி பெற்றாராம்.



கி.மு 708ல் அறிமுகப்படுத்தப்பட்ட, ஒரு விளையாட்டு வீரர் ஐந்து வெவ்வேறு வகை போட்டிகளில் வெற்றி பெற்று முன்னனி வீரராக கருதப்படும் விதிமுறைதான் பெந்தலோன். பெண்கள் முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்ட ஆண்டு 1900. ஆரம்ப காலங்களில் மக்கள் அவ்வளவாக அறிந்திருக்காத வகையில் இருந்த ஒலிம்பிக் போட்டிகள் பல சிரமங்கள் இடையே நடந்தனவாம்.

பனிக்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924ல் ஆரம்பிக்கப்பட்டன.ஒலிம்பிக் வளையங்கள் 1913ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு முதன் முதலில் 1920ல் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்பட்டனவாம். இந்த ஐந்து வளையங்களில் நீல நிற வளையம் ஐரோப்பாவையும் மஞ்சள் ஆசியாவையும் கருப்பு ஆப்பிரிக்காவையும் பச்சை ஓசியானியாவையும் சிவப்பு அமெரிக்காவையும் குறிப்பிடுகின்றன.