Translate

வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு விசாவை உறுதிபடுத்த


வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு சுற்றுலா விசாவில் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மத்திய குற்றபிரிவு போலீஸ் வெளியிட்ட அறிக்கை.வெளிநாடு,உள்நாட்டு வேலை வாய்ப்பு குறித்த பத்திரிகை செய்திகளை, குடியுரிமை பாதுகாப்பு அலுவலரை 044-2489 1337 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விளம்பரத்தின் உண்மை தன்மையை உறுதி செய்த பின்னர் பரிசீலனை செய்யலாம்.

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லக் கூடாது. அது சட்டத்துக்கு புறம்பானது. தரகர்கள் தரும் விசாவை கடைசி நேரத்தில் விமான நிலையத்தில் வாங்க வேண்டாம். வெப்சைட் மூலமாக அனுமதி பெற்ற ஏஜென்டுகளின் முகவரிகளை தெரிந்து கொள்ளவும். பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிக்கிறோம் என்றும், பணம் செலுத்த வேண்டும் என்று கூறி வருபவர்களை நம்ப வேண்டாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.